
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம். பி. எம். பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைறூஸின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் முஸ்தபா றயீஸ், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவர் என். எம். அமீன், British College of Applied Studies (BCAS) தனியார் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எம். எம். அப்துல் றஹ்மான், British College of Applied Studies தனியார் உயர் கல்வி நிறுவனத்தின் கட்டார் கிளையின் பணிப்பாளர் பொறியியலாளர் எம். எம். பளுலுல் ஹக், மகப்பேற்று வைத்திய நிபுணர் எஸ். எச். எம்.சிராஜ் (வி.ஓ.ஜி),காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமனி மௌலவி எம். எச். எம். புகாரி (பலாஹி), ஏ. ஜி. எம். பிரதர்ஸ் உரிமையாளர் ஏ.ஜே.எம்.ஹாரூன்,காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.எம்.அப்கர் அஹமட்,மற்றும் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
சிறுவர்களை அல்குர்ஆனின் நிழலில் பயிற்றுவிக்க வேண்டியதன் அவசியம்’ எனும் தலைப்பில் டாக்டர் முஸ்தபா ரயீஸ் சிறப்புரையாற்றினார்.
இதன் போது பிரதம அதிதிக்கு பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமியினால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதோடு பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலை 50 மாணவ மாணவிகளும் டாக்டர் முஸ்தபா றயீஸ், வைத்திய நிபுணர் எஸ். எச்.எம்.சிராஜ், பொறியியலாளர் எம். எம். அப்துல் றஹ்மான், பொறியியலாளர் எம். எம். பளுலுல் ஹக், ஏ. ஜி. எம். பிரதர்ஸ் உரிமையாளர் ஏ. ஜே. எம். ஹாரூன் ஆகியோரினால் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு பெண் அதிதிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு மாணவ மாணவிகளில் ஆற்றல்களை வெளிக்கொணரும் தேசிய கீதம், சிறுவர் பட்டி மன்றம், கஸீதா, ஸீறதுர் ரஸூல், அல் குர் ஆன் மாநாடு போன்ற பல்வேறு விதமான இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment