
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் மூன்றாவது மனித நேயம் பேணும் பாரிய சிரமதான நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம். எச். ஏ. றஷீத் தலைமையில் இடம்பெற்ற இவ் சிரமாதன நிகழ்வில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பபு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்பலா,சிகரம் ,ஒல்லிக்குளம் ஆகிய குக் கிராமங்களில் பாரிய சிரமாதனப் பணிகளை செய்து வருவதோடு மட்டுமன்றி கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றது.
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் பள்ளிவாயல்,பொலிஸ் நிலையம்,பாடசாலை என்பன துப்பரவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment