இரண்டு வாரங்களுக்கு காற்றுடன் மழை

???????????????????????????????கொழும்பு: தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் பல பிரதேசங்களில் கடுங் காற்றுடன் கூடிய அடை மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இதன்படி மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருணாகலை மாவட்டத்திலும் மலையகத்தின் கிழக்கைச் சேர்ந்த பல பிரதேசங்களிலுமே இக்காலப் பகுதியில் அடை மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஜீவன் கருணாரத்ன கூறினார்.

மேலும் இக்காலப் பகுதியில் நாடு முழுவதும் இடைக்கிடை கடுங்காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக் காட்டினார்.

இதேவேளை தெற் மேற்கு பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் போது இந்து சமுத்திரத்தில் தென்னிந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென இந்திய வளிமண்டலத் திணைக்களம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மழைக்காலம் முதலில் கேரளாவில் ஆரம்பித்து படிப்படியாக மற்றப் பகுதி களுக்குப் பரவும் என்றும் வளிமண்டல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அதனை அமெரிக்காவின் தேசிய கால நிலை சேவைகள் நிலையமும் ஊர்ஜிதம் செய்துள்ளது. மேலும் இந்தக் கால நிலை வங்காள விரிகுடாவின் ஊடாக கிழக்கு இந்தியாவையும் பாதிக்கும் என்றும் அமெரிக்க கால நிலை அவதானி கள் எச்சரிக்கை செய்கின்றார்கள்.

– தினகரன்

Published by

Leave a comment