
பழுளுல்லாஹ் பர்ஹான்
ஓட்டமாவடி: ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் கல்குடாத் தொகுதிக் காரியாலயம் இன்று (25.05.2013) சனிக்கிழமை கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் மாவடிச்சேனையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளருமானர் எம்.எம்.அஹமட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காரியாலயத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் ஹாபீஸ் அஹமட் நஸீர் அஹமட் , நீதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் டாக்டர் ஹபீஸ், அமைச்சரின் இணைப்பாளர்கள் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கல்குடாத் தொகுதியில் உள்ள கிராம சேவகர் பிரிவு தோரும் நியமிக்கப்பட்டுள்ள பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கான அடையாள அட்டை பிரதம அதிதியால் வழங்கப்பட்டதுடன் வாழைச்சேனை அல் அக்ஷா விளையாட்டுக்கழகத்திற்கான விளையாட்டுச் சீருடையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment