
பழுளுல்லாஹ் பர்ஹான்
ஓட்டமாவடி: கல்குடா முஸ்லிம்ஸ்.கொம் என அறியப்பட்ட கல்குடா.இன்போ.கொம் இணையத்தளத்தின் பணிப்பாளரான ஓட்டமாவடி முஹம்மத் றிழா எழுதிய ‘முரண்பாடுகளை கையாளுதல்’ எனும் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை பிற்பகல் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயத்தில் கவிமணி எஸ். நளீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன், ஸ்ரீலங்கா முஸ்லிம்மீடியா போரத்தின் செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ. எம். ஏ. நிலாம், மீள்பார்வை பிரம ஆசிரியர் சிறாஜ் மஷ்ஹுர், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம். ரீ.எம்.ரிஸ்வி, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி,இலங்கை போக்குவரத்துச் சபை றிதிதென்ன சாலை முகாமையாளர் ஏ. பீ. எம். சனூஸ், அல் கிம்மா சமூக சேவை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி ஹாறூன் (ஸஹ்வி) மற்றும் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நூலின் பிரதிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம்மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன் அதிதிகளுக்கு வழங்கி வைத்தார்.
குறித்த நூலை எழுதிய நூலாசிரியர் முஹம்மது றிழா சிறுவயதிலிருந்தே எழுத்துத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு கல்குடா.இன்போ இணையத்தளத்தின் நிறுவுனராகவும் அதன் பிரதான செயற்பாட்டாளராகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment