– டீன் பைரூஸ்
காத்தான்குடி:வலய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான வெளிவாரி மதிப்பீடு வலய கல்வி உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் சென்ற 21.05.2013 இடம் பெற்ற போது புதிய காத்தான்குடி மட்-அல் அமீன் வித்தியாலயம் — 80.03 — புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. மாணவா்களின் செயற்பாடுகளும் , பாடசாலை சுற்று வளாகமும், 08 பண்புத் தரங்களும் , மதிப்பீடு செய்யப்பட்டதுடன் ஒவ்வொரு ஆசியா்களும் தனித் தனியாக மதிப்பீடு செய்யப்பட்டனா்.இதன் அடிப்படையிலேயே மட்-அல் அமீன் மஹா வித்தியாலயம் இறுதிப் புள்ளியாக 08.03 பெற்றுக் கொண்டது.
இவ்வருடம் மேற் கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் எமது கோட்டத்தினை சேர்ந்த மட்-மம-அல் அமீன் மஹா வித்தியாலயம் முதல் இடத்தினை பெற்றுக் கொண்டதினை இட்டு மகிழ்ச்சி அடைவதுடன் இப்பெறு பேற்றினை பெற்றுத் தந்த பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பகுதி தலைவா்கள், அனைத்து ஆசிரியா்கள், கல்வி சாரா ஊழியா்கள், மாணவிகளுக்கும் பாடசாலை அபிவிருத்திக் குழு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
பிரதி அதிபா் ALM.ARAFATH-BBA அவா்களின் மகத்தான சேவையினையும் பாராட்டினர்.
Leave a comment