– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கா தூதுவராலயத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக ஊடங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கான ‘சமூக ஊடகங்களின் பாதிப்பு’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் செயலமர்வு இன்று (25.5.20113) காலை மட்டக்களப்பு காத்தான்குடி நியு கடாபி ஹோட்டல் ரெஸ்டுரண்டில் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் ஆரம்பமானது.
இந்த செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஏ.எம்.நிலாம், உப தலைவர்களான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, றசீத் எம்.ஹபீழ், உப செயலாளரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பி.எம்.பைறூஸ் பொருளாளர் எம்.பாயிஸ், பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் றொசான் கப்ரியல,ஊடகவியலாளர் எம்.ஷாஜஹான்,காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன்,கிழக்கு மண் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரீ.எல்.ஜவ்பர்கான் மற்றும்;,’லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த 35 தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கு பற்றியுள்ளதுடன் இதன் இறுதி நிகழ்வு நாளை மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment