காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் 75வது மாணவர் மன்றம்

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் 75வது மாணவர் மன்றம் இன்று வியாழக்கிழமை அல்மனார் அறிவியற் கல்லூரியின் மேல்மாடியில் ஸைத் இப்னு ஹாரிதா அணியின் தலைவர் மாணவன் ஆர்.எம்.மகாரிம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளரும் அறபுப் பகுதிப் பொறுப்பாளருமான அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி), கல்லூரியின் மேற்பார்வையாளரும் பகுதி நேர ஆசிரியருமான மௌலவி ஏ.பீ.எம்.பஸீல் (மனாரி), அல் மனார் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அறபு, தமிழ், ஆங்கில மொழிகளில் உரைகள், கவிதைகள், இஸ்லாமிய பாடல்கள், பொது அறிவு நிகழ்ச்சி, மக்களை விழிப்புணர்வூட்டக் கூடிய மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்களை பிழை என சித்தரித்துக் காட்டக்கூடிய நாடகம் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இது தவிர தினமும் இஷாவுக்குப் பின்னர் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொன்னவர்களுக்கு அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் அப்பாஸியினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷெயக் ஏ.எல்.மும்தாஸ் மதனியின் வழிகாட்டலின் கீழ் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் அப்பாஸியினால் பல்வேறு கல்வி, மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இந்த நிகழ்வை அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் தற்போதைய மாணவத் தலைவரும் மாணவர் மன்ற பொதுத் தலைவருமான மாணவன் கன்சுல் மக்பீ, இன்றைய மாணவர் மன்றத் தலைவர் மாணவன் ஆர்.எம். மகாரிம், செயலாளர் ஏ.ஜீ.எம். சும்ரி ஆகியோர் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment