வெளிவாரி மதிப்பீட்டில் பிரதி அதிபரின் தலைமையில் மட்டு அல்-அமீன் மகா வித்தியாலயம் முதலிடம்

IMG_1633– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: 21.05.2013 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வெளிவாரி மதிப்பீட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டில் காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலயம் அதிகூடிய புள்ளியான 80.03 புள்ளிகளை எடுத்து முதலிடத்தில் உள்ளது.

காத்தான்குடிப் பிரதேச கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.சுபைரின் தலைமையில் சுமார் 15 பேர் குழு பாடசாலையின் நிர்வாகம், பண்புத்தரம், கற்பித்தல் செயற்பாடு முதலியவைகளை மதிப்பீடு செய்தது. காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலய பிரதி அதிபர் யசீர் அறபாத் ஜே.பி தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக முகம் கொடுத்தததுடன் காலை7.00 மணிக்கு முதல் வருகை தந்த மதிப்பீட்டுக்குழு ஆசிரியர்களின் வருகையை அவதானித்தது. காலை 7.21 மணிக்கு முதல் ஆசிரியர்கள் அனைவரும் சமுகமளித்திருந்தனர்.

பிற்பகல் 2.00 மணியளவில் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி தமது மதிப்பீட்டு அறிக்கையை குழு சமர்ப்பித்தது. அதன்போது உரையாற்றிய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள்… இந்த மதிப்பீடு மிகவும் திருப்தியாக இருந்ததாகவும், ஆசிரியரிகள் மிகவும் ஒத்துழைப்புத் தந்ததாகவும், வேறு எங்கும் இல்லாதவாறு ஆசிரியர்கள் தங்களை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டியதாகவும் கூறியுள்ளனர்.

IMG_1633

மதிப்பீட்டின் இறுதி முடிவை அறிவித்த பிரதேசக் கல்விப் பணிப்பாளர், காத்தான்குடிக் கோட்டத்தில் இதுவரை  மதிப்பீடு செய்த பல பாடசாலைகளுக்குள் அதிகூய புள்ளியான 80.03 புள்ளிகளை எடுத்து அல்-அமீன் மகா வித்தியாலயம் முதலிடத்தில் இருக்கின்றது எனக்கூறி தனது பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பிரதி அதிபர் யசீர் அறபாத் அவர்களின் சிறந்த அணுகுமுறையும், திறந்த மனதோடு நடைபெற்ற கலந்துரையாடல்களும்தான் எங்களை முழுமூச்சாக இம்மதிப்பீட்டுப் பணிக்கு ஆயத்தமாவதற்கு தூண்டுகோலாக அமைந்தன என்று காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலய ஆசிரியர்கள் ஏகோபித்த கருத்தை தெரிவித்தனர்.

குறித்த முக்கியமான தருணத்தில் அதிபர் அதிபர் எம்.எம். கலாவுதீன், கடந்த 13.05.2013 அன்றிலிருந்து 3 மாத கால லீவில் ஆங்கிலப் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக கண்டிக்குச் சென்றிருந்தார்; என பாடசாலை வட்டாரம் தெரிவித்ததுடன் குறித்த வெளிவாரி மதிப்பீட்டில் சகல ஆசிரியர்களும் பிரதி அதிபரின் தலைமையில் உற்சாகமாக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s