– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ரியல் ஏசியன் விளையாட்டுக் கழகத்தினால் பாடசாலை மாணவிகளுக்கு ‘தற்போழுது சமூகத்தில் கையடக்கத் தொலைபேசியினை மக்கள் அதிகமாக நன்மையான விடயத்திற்கு பயன்படுத்துகிறார்களா? அல்லது தீமையான விடயத்திற்கு பயன்படுத்துகிறார்களா?’ எனும் தலைப்பில் விவாதப்போட்டி ஒன்று நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 06.00 மணிக்கு காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயம், காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கிடையில் இந்த விவாதப் போட்டி இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில்பாடசாலையிலிருந்து அதிபர், ஆசிரியர், மாணவிகள், மாணவிகளின் பெற்றோர் (பெண்கள்) கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a comment