– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி ஹிறா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் சவூதி அரேபிய அப்துல் அஸீஸ் முஹம்மத் ஆரிப் பௌண்டேஷனின் நிதியுதவியுடன் காத்தான்குடியிலுள்ள வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியிலுள்ள 100 வறிய குடும்பங்களுக்கு இலவசவ காசோலைகள் வழங்கப்பட்டன.
காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச் அஸ்பர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், சவூதி அரேபிய நாட்டு விமான சேவைகளுக்கான பிரதம பொறியியலாளர் முஹம்மத் உமர் அஸ்ஸமர் கந்தீ, சவூதி அரேபியாவைச் சேர்ந்த வணிகத்துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற அப்துர் ரஹ்மான், அல் மனார் அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.மும்தாஸ் மதனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஹிறா பௌண்டேஷன் தலைவர் குறைஷ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி ஹிறா பௌண்டேஷனினால் அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக் காசோலைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment