லண்டன் கொலை: ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எடுப்போம்’

article-2329236-19F0DD0C000005DC-733_634x352[1]-MJ

லண்டன்: நேற்று மாலை லண்டன் வூல்விச் நகரில் கொல்லப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரரின் சம்பவத்திற்குப் பின்னர் மக்களும், ஊடகங்களும் கொதித்தெழுகின்றன.

கறுப்பினத்தைச் சேர்ந்த இருவரே இக்கொலையைப் புரிந்திருக்கின்றனர். இரகசிய கமெரா (CCTV) மற்றும் பொது மக்களின் கையடக்கத் தொலைபேசிக்குள் பதிவாகியுள்ள இக்கொலையும் அதன் பின்னரான சம்பவங்களும் தற்பொழுது பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நேற்று பி.ப. 2 மணியளவில் லண்டன் வூல்விச் நகரில் சிவில் உடையில் சென்றுகொண்டிருந்த பிரித்தானிய இராணுவ வீரர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின், கத்தியைக் கையிலெடுத்த கொலைகாரர்கள் இருவரும் பொது மக்களை நோக்கி ஆவேசமாகக் குரல் எழுப்பினர்.

அவ்வீதியால் பஸ் ஒன்றில் பயணித்த ‘லொயாயு கெண்ணட்’ எனும் 48 வயதுபெண் ஒருவர் சம்வத்தை நேரில் கண்டதும் பஸ்ஸை விட்டு அவசரமாக இறங்கி கொலைகாரர்களை நோக்கி ஓடிவந்தார்.

இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்ட சடலத்தைக் கொலைகாரர்களிடம் காட்டி “நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? உங்களுக்கு குடும்பம் இல்லையா? தாய் இல்லையா? குழந்தைகள் இல்லையா?” என ஆவேசமாகவும், அனுதாபமாகவும்  வினவினார்.

கொலைகாரருடன் விவாதிக்கும் பெண் (வலது)

பிறவுன் நிற மேல் அங்கி அணிந்த நிலையில் கையில் இரத்தம் தோய்ந்த கத்தியுடனும் காணப்பட்ட கொலை காரர் குறித்த பெண்ணை நோக்கி:

‘கண்ணுக்கு கண் எடுப்போம். நீங்கள் மாத்திரம் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? லண்டனில் போர் தொடங்கப்படும், அழிவுகளும் இடம்பெறும். கூப்பிடுங்கள் உங்கள் பொலிஸாரை-அவர்களையும் தாக்குவதற்கு நாங்கள் தயார்’ என கூறி முடிப்பதற்குள் பொதுமக்களின் அவசர தகவலையடுத்து இரகசியமாக விரைந்த பொலிஸார், குறித்த கொலைகாரர் இருவரையும் சுட்டனர்.

article-2329236-19F0DD0C000005DC-733_634x352[1]
பொதுமக்களை எச்சரிக்கும் கொலையாளி

இச்சம்பவத்தில் இப்பெண்மணியும் சுடப்பட்டிருந்தார். கொலைகாரர்கள் இருவரும் பொலிஸாரின் கஸ்டடியில் இருப்பதாகவும், மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சம்பவத்தை நேரில் கண்ட பலர் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

‘ஆப்கானிஸ்தானிலும், முஸ்லிம் நாடுகளிலும் சிறுவர்களையும் பெண்களையும் இவர்கள் கொல்கின்றனர்’

‘இன்றிரவு லண்டனில் போர் தொடங்குவோம்’

என கொலைகாரர்கள் இருவரும் கூறியதாகவும்

மேலும்,

‘ ஓர் பெரிய கத்தியும், சிறிய கத்திகளும் ஒரு துப்பாக்கியுடனும் கொலைகாரர்கள் இருவரும் காணப்பட்டனர்’

‘இருவரும் கறுப்பினத்தைச் சார்ந்தவர்கள்’

‘அல்லாஹூ அக்பர்’ என கூறி ஓடிச் சென்றனர்’

‘ கொல்லப்பட்டவர் ஓர் பிரித்தானிய இராணுவ வீரர். இவர் ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்திருந்தார்’

article-2329236-19F0F08D000005DC-926_634x340[1]
கொலையாளிகளை கைது செய்யும் பொலிஸார்

மேற்கண்டவாறு கருத்துக்கள் சாட்சிகளாக எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘பிரித்தானியாவை பயங்கரவாதிகளிடமிருந்து கேடயமாக ஆக்கவேண்டும்’ என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆவேசமாகக் கூறியிருக்கின்றார்.

நேற்று இரவு முழுவதும் சுற்றிவளைப்புக்களும் திடீர் சோதணைகளும் இப்பகுதியில் இடம்பெற்றதுடன், ஏனைய இடங்களிலும் பொலிஸார் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த கொலை காரர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் இருக்கின்றனரா எனவும், இப்பகுதியில் மேலதிக ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனவும் சந்தேகத்தினடிப்படையில் துரித தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment