முல்லைத்தீவு முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகள் முல்லைத்தீவு அரசாங்க அதிபரை சந்தித்தனர்

mullaitivu (4)–  இர்ஷாத் றஹ்மத்துல்லா

முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகள் குழுவொன்று இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது கோறிக்கையினை முன் வைத்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தாங்கள் இங்கு மீள்குடியேற வந்ததாகவும், இதுவரைக்கும் தமது முஸ்லிம்களுக்கு தேவையான எவ்வித வசதிகளையும் அரசாங்கமும், அரசாங்க அதிகாரிகளும் செய்து தர முன்வராதமை பெரும் கவலையினை எற்படுத்தியுள்ளதாகவும் அப்பிரதி நிதிகள் தெரிவித்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு இங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிறகு முஸ்லிம்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டே தற்போது தமது தாயகத்தில் மீள்குடியேற வந்த போதும், அவர்கள் மீள்குடியமர்வதற்கு தேவையான காணிகளை வனபரிபாலன திணைக்களம் பிரதேச செயலளாருக்கு விடுவித்துள்ள நிலையில் அவற்றை பெற்றுத் தருவதில் காணப்படும் பின்னடைவு குறித்தும் இப்பிரதி நிதிகள் முல்லை அரச அதிபர் என்.வேதநாயகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்கான தடைகள் குறித்து தமது முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும், ஏற்கனவே இம்மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்தயினை வழங்க முடியாது எனில் தாங்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம் பெயர் நேரிடும் என்பதை தெரிவித்துள்ளதாக இந்த பிரதி நிதிகள் தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment