பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் 3வது வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் மூன்றாவது வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் முஸ்தபா ரயீஸ் கலந்து கொள்ளவுள்ளார். கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவர் என்.எம். அமீன் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் ‘சிறுவர்களை அல்குர்ஆனின் நிழலில் பயிற்றுவிக்க வேண்டியதன் அவசியம்’ எனும் தலைப்பில் டாக்டர் முஸ்தபா ரயீஸ் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

பிஸ்மி அல் குர்ஆன் பாடசாலையிலிருந்து இம் முறை 50 மாணவ மாணவிகள் அல்குர்ஆன் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment