பிரதியமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டு விசேட கலைஞர்கள், பொறியியலாளர்கள் அல் மனார் கல்லூரிக்கு விஜயம்

???????????????????????????????
BY: FM. FARHAN

– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டு விசேட கலைஞர்கள், பொறியியலாளர்கள் இன்று வியாழக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.

இவர்கள் இன்று இரவு காத்தான்குடி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் கல்லூரியின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பார்வையிட்டனர்.

இதன்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், சவூதி அரேபிய நாட்டு விமான சேவைகளுக்கான பிரதம பொறியியலாளர் முஹம்மத் உமர் அஸ்ஸமர் கந்தீ, சவூதி அரேபியாவைச் சேர்ந்த வணிகத்துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற அப்துர் ரஹ்மான், அல் மனார் அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.மும்தாஸ் மதனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், அல் மனார் அறிவியற் கல்லூரி விரிவுரையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment