‘பசும்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம்’ காத்தான்குடியில்

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: அரசாங்கத்தின் ‘பசும்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டத்தின்’ கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களுக்கிடையில்  பசும்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் இன்று வியாழக்கிழமை புதிய காத்தான்குடி பதுறியா சமூக சேவை நிலையத்தில் காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகப் பொறுப்பாளர் ஸலீம் தலைமையில் நடைபெற்றது.

காலை 09.00மணிமுதல் மதியம் 01.00 மணிவரை இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி எஸ். எம். ஐ. எல். சாகலசூரிய, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் வி. கோவேந்திரன், கால் நடை அபிவிருத்தி காரியாலய உத்தியோகத்தர் சலீம் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுமக்களுக்கு 500கிலாஸ் பசும்பால் வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலும் பசும்பாலை ஆர்வத்துடன் அருந்தியமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment