
– பழுளுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களினால் இன்று ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட உறுமகாம் பிரதேசத்திற்கான வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்படவுள்ளது.
கடந்த முப்பது வருட கால மகா யுத்தத்தினால் இடம்பெயர்ந்து உயிர் உடமை மற்றும் அடிப்படை வசதிகளை இழந்து மீண்டும் அப்பிரதேசங்களில் குடியேறியுள்ள அம்மக்களின் தேவையை உணர்ந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இவ்வீட்டுத்திட்டதிற்கான அடிக்கல் நடப்பட உள்ளது.
அம்மக்களது நிலையினைக்கருத்திற் கொண்டு சமீபத்தில 140 இலட்சம் செலவில் மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதோடு எதிர்காலத்தில் அம்மக்களுடைய ஏனைய கல்வி குடிநீர் போன்ற ஏனைய அடிப்படைத்தேவைகளையும் மிக விரைவில் அம் மக்களுக்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி அம்மக்களது வாழ்வாதாரத் தேவைகளை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிசெய்து வருவதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
Leave a comment