முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து மீண்டும் வெளியேரும் நிலையேற்பட்டுள்ளது!

BY: Mullaiyanpan
BY: Mullaiyanpan

–  முல்லையன்பன்

முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து மீண்டும் வெளியேரும் நிலையேற்பட்டுள்ளதுடன்,இவற்றை தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ள அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகள் குறித்தும் முல்லை மாவட்ட முஸ்லிம்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.

கடந்த 30 வருடங்களாக வடக்கில் காணப்பட்ட யுத்த சூழல் முஸ்லிம்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியிருந்ததை முழு உலகமும் இன்று அறிந்து கொண்டுள்ளது. அன்று வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே புலிகளினாலும் அவர்கள் சார்பு கொள்கை கொண்டவர்களினாலும் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த வெளியேற்றமானது மறக்கவோ அல்லது மறைக்கப்படவோ முடியாததொன்று என்றால் அதில் பிழையில்லை என்றே கூறவேண்டும். இந்த துன்பியல் வாழ்வுக்கு துணைபோனவர்கள் அழிந்து போனாலும், அதற்கு உதவி செய்தவர்களின் அடுக்கடுக்கான கைங்கரியங்கள் தொடர்ந்து கொண்டே தான் போகின்றன.

இன்று வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு எதிராக திருகு தாளங்களுக்குள் புதைந்திருக்கும் முகங்களை வெளிக்காட்ட வேண்டிய தேவையிருக்கின்றது.குறிப்பாக கடந்த சில மாதங்களாக புகைந்துக் கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட முள்ளியாவளை மீள்குடியேற்றத் திட்டத்தின் உண்மை நிலை வெளிப்படுத்தப்படாத நிலையில் அவற்றிற்கு பிழையான கருத்துக்களை எழுதும் ஊடகங்கள் மத்தியில் யதார்த்தத்தை புரிய வைக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.

mullaitivu (2)

கடந்த 2009ஆம் ஆண்டு வடக்கில் இந்த அரசாங்கம் சாமதானத்தை ஏற்படுத்தியது.அதன் பின்னர் தமிழ் மக்களை அவர்களது தாயக மண்ணில் மீள்குடியேற்றம் செய்தது.ஆனால் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய அம்மக்களது பிரதி நிதிகள் முயற்சிகளை பல தரப்பில் செய்த போதும்,அது வெறும் விழலுக்கு இறைத்த நீராகவே போய்விட்டது.இன்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு முஸ்லிம்கள் செய்த தியாகங்களின் வெளிப்பாடாகவே இந்த மீள்குடியேற்றம் அமைவதாக முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.ஆனால் அதற்கு தேவையான வழி வகைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதா என்ற சந்தேகம் தற்போது வடக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தீவு மாவட்டத்தில் ஏற்கனவே முஸ்லிம் மக்கள் வாழந்த கிராமங்கள் அன்று புலிகளினால் வழங்கப்கப்பட்டதனால் முல்லையில் வாழ்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற தேவையான காணிகள் போதாமை உள்ளதாகவும் அவற்றை வேறு இடங்களில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் செயலணியின் செயலாளர் எஸ்.பீ.திவாரத்ன மாவட்ட அரச அதிபர்களுக்கு  2012.11.22 ஆம் திகதி இடப்பட்ட கடிதெமொன்றினை அனுப்பியிருந்தார்.அதற்கமைவாக நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டிருந்தார் இந்த நிலையில் இன்று அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள முல்லை மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; தொடர்பில் மீள்குடியேற்றம்,அபிவிருத்தி,பாதுகாப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் மேற்கொள்ளப்பட்ட பல தீர்மானங்கள் வெறும் வாய்ச்சவடல்காளகவே மாறிவிட்டன.ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட  நல்லிணக்க மற்றும் கட்றறிந்த ஆணைக் குழுவின் சிபாரிசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதாக பகிரங்கமாக நாட்டுக்குள்ளும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தியுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

mullaitivu (3)

1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர் அவர்களது எண்ணிக்கை 1445 ஆக காணப்பட்டது.அன்று அவர்கள் வெளியேற்றப்பட்டது தொடக்கம் இன்று வரை ஒரு அங்குல காணியேனும் முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை என்று தற்போதைய அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் இந்த காலப் பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன்,அவர்களுக்கான பல் தேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதையும் அவரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஜனாதிபதி செயலணியின் செயலாளர்  அவர்களினால்    திகதியிடப்பபட்ட  மாவட்ட செயலளாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதன் பிறகு கடந்த 3 வருட காலமாக இந்த முஸ்லிம்களை மீள்குடியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேட்டால் அது வெறும் கூடிக் கலைந்த கூட்டமாகத் தான் இருந்துள்ளது.

முல்லை மாவட்ட முஸ்லிம்கள் தமது சொந்த முயற்சியால் தாம் வாழ்ந்த சொந்த கிராமங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு சென்ற போதும் இம்மக்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளையும்,அரசாங்க அதிபரோ,பிரதேச செயலாளரோ செய்து கொடுக்க முன்வரவில்லை.தன்னால் அவற்றை செய்து கொடுக்க முடியாத போதும்,அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைக் கூட இம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க ஒரு கூட்டத்தையேனும் கூட்டியதாக அறிக்கையில்லை.இந்த நிர்வாகத்திலும் இனவாதம் ஒழிந்திருக்கின்றது.

அரசாங்க அதிபரை பொறுத்த வரை அவர் சாதுவானவராக இருக்கின்றார் என்று கூறினாலும்,அவரது வரலாற்று அரசியல் பின்னணியானது கவனத்தில் நோக்கப்பட வேண்டியது.அதே போன்று தற்போதைய மருதயன்பற்று பிரதேச செயலாளர் மீது நம்பிக்கை கொள்ள முடியாது ஏனெனலில் அவருக்கு எதிராக மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் பின்னணி தெள்ளத் தெளிவானது. குறிப்பாக இனவாத அரசியல் கட்சியொன்றின் வளர்ச்சிக்கு  முட்டுக் கொடுக்கும் ஒருவராகவும்,அரச இரகசியங்களை அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகளுக்கும்,முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை இல்லாமல் சக்திகளுடனும் நெருக்கமாக செயற்பட்டு அவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் ஒரு ஏஜன்டாக இருப்பதை காணமுடிகின்றது.

mullaitivu (4)

முள்ளியாவலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காணியானது வனவலபரிபாலனத்தின் திணைக்களத்திற்கு சொந்தமானது என்பதால் அதனை உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக விடுவிக்கப்பட்டு அது காணியற்ற முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து நடவடிக்கையெடுக்குமாறு வனபரிபாலன திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கிய போதும்,அதனை தட்டிக்கழித்து வேறு மாவட்ட தமிழ் மக்களை கொண்டு வந்து அதற்கு எதிரான போராட்டங்களை வடிவமைத்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

துன்பங்களையும்,துயரங்களையும் சந்தித்து அதிலிருந்து மீள எழும்பும் இந்த முஸ்லிம்களின் முயற்சிக்கு துணை போகாவிடாது அவர்களை தமது தாயகத்தில் இருந்து விரட்டியடிக்கும் வேலைகள் திரை மறைவில் அரங்கேற்றப்பட்டு வந்த போதும்,தற்போது அது பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுகின்றது.இந்த சவால்களுக்கும் தடைகளுக்கும் மத்தியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ந்து அரச உயர் தரப்புடன் முட்டி மோதி முல்லை மாவட்ட முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயதுக்கு நியாயத்தை பெற்றுத் தருமாறு போராட்டங்களை நடத்தியதுஅந்த போராட்டத்தின் நியாயாதிக்கத்தினையும்,உண்மையினையும் பரிந்து கொண்ட அரச உணரஇந்த நிலையினையும் புரிந்து கொண்ட வனவல அதிகாரிகள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தேiவாயன காணிகளை அடையாளப்படுத்தி 2013.01.22 ஆம் திகதி EMDL/04/02/12/10/2012 என்ற இலக்க கடிதத்தின் மூலம் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அதற்கான அனுமதியினை பிரதேச செயலாளருக்கு வழங்கியிருந்தார்.

இருந்த போதும் இறுதியில் நடந்தது என்ன?முஸ்லிம்களுக்கு இந்த காணி கிடைக்க கூடாது என்பதில் குறியாக இருக்கும் முத்தரப்புக்கள் ஒன்று சேர்ந்து இதற்கு எதிரான சதிகளை தீட்டினர்.அது உயர் மட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.தமது மீள்குடியேற்றம் வெற்றியளித்து விட்டது தாங்கள் எமது பூர்வீக மண்ணில் தமிழ் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழுகின்றோம் என்ற ஆசையில் இருந்த முஸ்லிம்களுக்கு பேரடி அடியாக விழுந்துவிட்டது.

இந்த வரலாறுகள் தெரியாமல்; கொள்ளாமல் தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கமைவாக மட்டும் தலையிட்டு முஸ்லிம்களின் எதிர்கால வாழ்க்கையினை சீர்குலைக்கும் செயற்பாடுகள் ஒரு போதும் காத்திரமானதாக அமையாது.இந்த விடயத்தில் முஸ்லிம் தலைமைகள்,மக்கள் பிரதி நிதிகள் காய்தல் உவர்தல் இன்றி யதார்த்தத்தின் அடிப்படையில் சிந்திக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.இந்த சந்தர்ப்பம் சரியாக முஸ்லிம் தலைமைகளால் பயன்படுத்தப்படாத நிலையில் முல்லைத்தீவில் அடிப்படை வசதிகளின் அவலத்தை அனுபவிக்கும் முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற தயாராகின்றனர்,இந்;த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.

 

Published by

Leave a comment