கிண்ணியா: இடைநிறுத்தப்பட்டிருந்த கிண்ணியா துறையடி வரவேற்பு பதாதை நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்க DCC அனுமதி கிடைத்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம். ஹில்மி தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது நகரபிதா டொக்டர் ஹில்மி அவர்களினால் வழங்கப்பட்ட விஞ்ஞாபன வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக வரவேற்பு பதாதை உள்வாங்கப்பட்டிருந்தது. இந்த வரவேற்பு பதாதைக்கான நிதியினை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் சொந்த ஒதுக்கீட்டிலிருந்து 40 இலட்சம் ரூபா நிதியினை வழங்கியிருந்தமையினால் வரவேற்பு பதாதை நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெறும் இறுதிக்கட்டத்தில் இதன் நிர்மாணப்பணிகள் ஒரு வருடத்திற்கு முன்னர் பல அரசியல், கலாச்சார அழுத்தங்கினால் பூரணப்படுத்தப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டது.

இருப்பினும் கிண்ணியா நகரபிதா ஹில்மி அவர்களின் தொடர்ச்சியான சவாலுடன் கூடிய அயராத விடா முயற்சியினால் சென்ற மாதம் கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தின் போது வரவேற்பு பதாதையின் வேலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, மாவட்ட செயலாளர் ரஞ்சித் டி சில்வா, புத்தசாசன பிரதி அமைச்சர் குணவர்த்தன ஆகியோருடன் தொடர்ந்தேட்சியாக செய்துகொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பயனாகவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிண்ணியா துறையடி வரவேற்பு பதாதை நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதை அடுத்து கிண்ணியா நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தெரிவிக்கும் போது ‘வரவேற்பு பதாதைக்கான நிதியினை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களுக்கு திருமலை மாவட்ட கட்சியின் அமைப்பாளர் என்ற வகையில் கிண்ணியா மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதோடு இனிவரும் காலங்களிலும் அமைச்சர் மாவட்டத்திற்கான உதவிகளை வழங்கவிருப்பதாகவும் வரவேற்பு பதாதைக்கான நிர்மாணப் பணிகள் மிகவிரைவில் செவ்வனே பூரணப்படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.


Leave a comment