மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிசாலை திறப்பு விழா

பழுளுல்லாஹ் பர்ஹான்

Kalmunai-Municipal-Council[1]கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனையை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிசாலை திறப்பு விழாவும், 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும்,  மாநகர சபை உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார பரிசளிப்பு நிகழ்வும் இன்று (22.05.2013) மாலை 3.00 மணியளவில் சாய்ந்தமருது ‘பீச் பார்க்’ அருகாமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருந்த நீதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் நாளை (22.05.2013) நடைபெற உள்ள விசேட அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதனால் இந்நிகழ்வானது ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எதிர்வரும் 23.05.2013 ம் திகதி வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

Published by

Leave a comment