மும்பே: சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் 160க்கும் அதிகமான தரகர்கள் செயல்பட்டு வந்தது சி.பி.சி.ஐ.டி பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் தலைவனாக கருதப்படும் பிரசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி பொலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிக்கினர். சென்னையிலும் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட சூதாட்ட கும்பல் தலைவன் பிரசாந்த் மற்றும் 6 தரகர்களும் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், லப்-டப் ஆகியவையும் சிக்கின.சொத்து ஆவணங்கள் மற்றும் பலகோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் 160 தரகர்கள் பிரசாந்த் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான சஞ்சய் பாவ்னா, உத்தம் சி.ஜெயின் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர். பிரசாந்தின் கீழ் 160க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தரகர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை டிபோசிட் தொகையாக பெற்றுள்ளார் பிரசாந்த்.
அரசியல் தொடர்புமேலும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரும் பிரசாந்துக்கு நெறுங்கிய நண்பராக விளங்கியுள்ளார். இவர்களை பிரசாந்த் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி உள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இவர்களுடன் பிரசாந்த் தகவல்களை பரிமாறிக் கொண்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தவும் பொலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிகளை குவித்த பிரசாந்த் குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகர்களுடன் நெறுங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இதற்காக பிரசாந்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது அவர் யார்-யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.
சி.பி.சி.ஐ.டி பொலீஸ் கஸ்டடி இந்த சூழலில்இ ஏற்கனவே கைதாகி சிறையில் இருந்த தரகர்கள் ஹரிஸ் பஜாஜ், பப்பு, வேதாச்சலம், லக்கி ஆகிய 4 பேரை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி பொலீசார் அவர்களிடம் விடியவிடிய விசாரணை நடத்தினர். இதில் ஐ.பி.எல் அணிகள் மற்றும் வீரர்களுடனான தொடர்பு குறித்தும் மற்ற மாநில சூதாட்டக் கும்பல்களுடன் உள்ள தொடர்பு பற்றியும் விசாரிக்கப்பட்டது. கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சூதாட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு 4 பேரிடமும் பொலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தலைமறைவாக உள்ள சஞ்சய் பாவ்னா, உத்தம்சி ஜெயின் உள்ளிட்ட 7 புரோக்கர்களை பிடிக்கவும் பொலீசார் வலை விரித்துள்ளனர். இவர்களில் சஞ்சய் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பி சென்று விட்டார். உத்தம் சி. ஜெயின் புனேயில் பதுங்கியுள்ளார். இதையடுத்து அமைக்கப்பட்ட 6 சிறப்புப் படையினர், தரகர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் தொடங்கிய சூதாட்ட புகார் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர் நகரங்களிலும் தோண்டத் தோண்ட பூதம்போல தரகர்கள் கிளம்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் ஸ்பொட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுடன் தொடர்பில் இருந்ததாக பொலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் ஸ்பொட் பிக்ஸிங்கில் கிரிக்கெட் வீரர்களுக்கும், தரகர்களுக்கும் இடையே உள்ள ஆளாக செயல்பட்டதற்காக மறைந்த பொலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் (49) நேற்று மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
முன்னதாக நேற்று முன்தினம் அவரிடம் பொலீசார் நடத்திய விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொலீஸ் விசாரணையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகனும், அணியின் சி.ஓ வுமான குருநாத் மெய்யப்பனுடன் தொடர்பில் இருந்ததாக வின்து ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
வின்துவின் போனில் அவர் குருநாத்துக்கு பலமுறை கால் செய்து பேசியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் குருநாத்துடன் பேசி முடித்த உடன் தரகர் ரமேஷ் வியாஸுக்கு போன் செய்து பேசியதாக பொலீசார் தெரிவித்தனர். பொலீசாரால் கைது செய்யப்பட்ட வியாஸ் தான் வின்துவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு உள்ளதை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிகளின்போது சென்னை அணியின் வி.ஐ.பி பெட்டியில் தான் வின்து அமர்ந்து போட்டிகளை பார்த்துள்ளார். சென்னை அணிக்கு வின்து எப்படி நெருக்கம் ஆனார் என்பது குறித்து பொலீசார் விசாரித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது சென்னை தொடர்புகள் குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மும்பை பொலீசார் குருநாத்திடம் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகனும் அந்த அணியின் சி.ஓ வுமான குருநாத் மெய்யப்பன்தான் தம்மை சென்னை போட்டியை பார்க்க வருமாறு அழைத்தார் என்று ஐ.பி.எல் பிக்சிங்கில் சிக்கி சிறைக்குப் போயிருக்கும் பொலிவுட் நடிகர் வின்து தாராசிங் கூறியிருந்தார்.
கடந்த மாதம் ஏப்ரல் 9-ந் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியைக் காண வின்து தாரா சிங் சென்னை வந்திருந்தார். அத்துடன் சென்னை அணியின் கப்டன் டோணியின் மனைவி சாக்ஷி அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார். சாக்ஷியும் வின்து தாராசிங்கும் ரசித்தபடி போட்டியை பார்க்கும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டும் இருந்தன.
அப்போது மும்பை மிட் டே ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த வின்து தாராசிங், அன்று இரவு எனக்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தன. டோணியின் மனைவி அருகே அமர்ந்தது ஊடகங்களில் இவ்வளவு முக்கியத்துவ்ம் பெறும் என்று நான் நினைக்கவே இல்லை..ஏன் ஊடகங்களின் காமிராக்கள் எங்களை நோக்கியே இருந்தது என தெரியவில்லை..சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பன்தான் எனக்கு மெட்ச் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். நான் சென்னை அணியின் பொக்ஸ்க்கு சென்ற போது டோணி மனைவி சாக்ஷிதான் என்னை அழைத்து அருகே உட்காருமாறு கூறினார்.
கடந்த ஐ.பி.எல் போட்டியின் போது சந்தித்துக் கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். பின்னர் டோணியையும் நான் சந்தித்துவிட்டு திருப்பதி பாலாஜியை தரிசிக்கப் போனேன் என்று கூறியிருந்தார். தற்போது குருநாத் மெய்யப்பனும் பொலீஸ் வலையில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் வீரர்களுக்கு உள்ளுர் அழகிகளையும், வெளிநாட்டு அழகிகளையும் தாராளமாக பகிரப்படுவதாகவும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளும், சொகு வாழ்க்கையும் வழங்கப்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
போட்டியின் பார்வையாளர் அரங்குக்கு விதம் விதமான நடிகைகளும், அழகிகளும் வீரர்களைக் கவர்ந்திழுப்பதற்காக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கினறனர்.
போட்டி நிறைவடைந்த பின்னர் விதம் விதமான மதுபானங்களும், அழகிகளும் உல்லாசத்துக்காக குறிப்பிட்ட வீரர்களுக்கு வழங்கப்படுகின்றனர் என்பதும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
பாவம் இரசிகர்கள்! கண் சிமிட்டாது இரசிகர்கள் போட்டியைப் பார்த்து மகிழ்வதிலேயே இவர்கள் இருப்பதால்தான் ஐ.பி.எல். களைகட்டி வருகிறது.
![ipl-spot-fixing-team-owners-relative-under-lens[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/ipl-spot-fixing-team-owners-relative-under-lens1.jpg?w=150&h=112)
![IMG-1792-jpg_115557[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/img-1792-jpg_1155571.jpg?w=630&h=420)
![M_Id_386583_Ranbir_and_Deepika[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/m_id_386583_ranbir_and_deepika1.jpg?w=630&h=381)
Leave a comment