பஸ்-முச்சக்கர வண்டி விபத்தில் ஆசிரியர் பரிதாபகரமாக உயிரிழப்பு

AUTO– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: வாழைச்சேனை, பாசிக்குடா பிரதான வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் எஸ்.கோமராஜன் (வயது 30) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்கு சொந்தமான முச்சக்கரவண்டியும் வாழைச்சேனை இலங்கை போக்குவரத்துச் சபை வாழைச்சேனை சாலைக்கு  சொந்தமான பஸ்ஸொன்றும் மோதிகொண்டதிலேயே குறித்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

 இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் எஸ்.கோமராஜன் (வயது 30) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பாடசாலையின் சிற்றூழியரான மார்க்கண்டு அகிலன் (வயது 30) என்பவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை சாலை பஸ்ஸின் சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும்  மேற்கொண்டு வருகின்றனர்.

AUTO

Published by

Leave a comment