மின்னேரியா: நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி அதிகாரிகளாக கடமை புரிவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள 15596 பட்டதாரிகளின் மூன்றாவது குழுவினரான 3361 பேர் எதிர்வரும் 23 ஆம் திகதி தமது இரு வார கால பயிற்சியை முடித்து வெளியேறவுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பட்டதாரிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இலங்கையில் உள்ள 16 நிலையங்களில் இரண்டு வார வதிவிட தொழில் பயிற்சிகள் பெறுகின்றனர்.
கிரிதள மற்றும் மின்னேரியா ஆகிய இடங்களில் பயிற்சி பெறும் மூன்றாவது குழுவினரை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடினார்.

Leave a comment