கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால், திருகோணமலை மாவட்டத்தில் 2607 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட வீதிகள் விரைவில் மக்களிடம் கையளிப்பு

uthuma lebbe– பழுலுல்லாஹ் பர்ஹான்

திருகோணமலை: மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கமைய நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மானமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின்  நிதியினால் திருமலை மாவட்டத்தில் 136முஆ கொங்கிறீட் வீதிகள் 2607 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டமாக கிண்ணியா பிரதேசத்தில்;ஆலங்கேணி வீதி, ஆதம்பாவா வீதி, கைவாய்க்கால் காக்காமுனை வீதி,  முனைச்சேனை வீதி, குறிஞ்சாங்கேணி வீதி, பலாக்கொட்டைவீதி, ஒரிக்கண்பாலம் வீதிகள் எதிர்வரும் 24.05.2013ம் திகதியும் எதிர்வரும் 26.05.2013 ம் திகதியும் கந்தளாய் பிரதேசத்தில் பேராறு அல்தாரிக் பாடசாலை வீதி, பேராறு குறுக்கு வீதி, ஆகிய இரு வீதிகளும் தம்பலகாம பிரதேசத்தில் 98 கிண்ணியா வீதியும் நீர்ப்பாசன குளங்களான கல்மிட்டியாவ குளம், பரவிபாஞ்சான் அணைக்கட்டு போன்ற அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மக்கள் பாவனைக்காக கையளிக்க உள்ளதாகவும் மிகுதியாக உள்ள வீதிகளை திருகோணமலை மக்களிடம் கட்டம் கட்டமாக கையளிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் திருமதி.டபிள்யு.ஜி.எம். ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எல்.எம்.ஹசன் (மௌலவி),; ஜயந்த விஜேயசேகர, கே.பிரியந்த பத்திரண, வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்.ஏ.எச்.எம்.அன்சார், கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ருப், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எஸ்.ஜவாத்துல்லாஹ், கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன், கந்தளாய் பிரதேச சபை தவிசாளர் பி.ஏ.கபில நுவான் அத்துகொரல பிரதேச செயலாளர்,எஸ்.பி.ஜெயசிங்க, வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எந்திரி. கருணநாதன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. பி.திலகராஜா, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எந்திரி. பி.ராசமோகன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. வி.ராஜகோபாலசிங்கம்  உட்பட மற்றும் பல உயர் அதிகாரிகளும், முக்கிய பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

Published by

Leave a comment