மட்டக்களப்பு: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் சிங்களக் கிராமமான மங்களகம மற்றும் தமிழ்க் கிராமமான பெரியபுல்லுமலை, முஸ்லிம் கிராமமான உறுகாமம் ஆகிய ஊர்களில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டம் இன்று சம்பிரதாய பூர்வமாக இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பெரியபுல்லுமலை கிராமத்தில் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டு அமைச்சர் பெருமக்கள் வெளியேறிக் கொண்டிருக்கையில் அங்கு வாசலில் ‘உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா?இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?’ எனும் தலைப்பில் துவேசத் துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா?இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?’என தலைப்பிடப்பட்டுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்தில் கௌரவத்திற்குரிய அரசியல் தலைவர்களே.அரச உத்தியோகத்தர்களே.
1990ம் ஆண்டு உறுகாமத்திலிருந்து வெளியேறிய முழு முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஏறாவூர் சதாம் உசேன் கிராமத்தில் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டு விட்டன.
இன்று இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தில் பயன்பெறும் முஸ்லிம்கள் யார்?
உறுகாமத்தில் தமிழர்களை மாத்திரமே அரசாங்கம் குடியேற்றம் செய்தது.முஸ்லிம்களை அல்ல.
பாதிக்கப்பட்ட முழுத் தமிழர்களுக்கும் வீடுகளை வழங்குங்கள் இறுதியாக உறுகாமம் தமிழ் மக்கள் எனக் குறிப்பிட்டு குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரம் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் முன்னாலேயே விநியோகிக்கப்பட்டதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இந்தத் துண்டுப் பிரசுரம் கொடுக்கப்பட்டதாகவும் உறுகாமம் முஸ்லிம் கிராமத்திற்கு வந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷகுறித்த இனத்துவேஷ நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்ததுடன் இதனை அனுமதிக்கவும் கூடாது என்றும் சொன்னதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தால் நிகழ்வுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்ச நிலையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment