இருதய அறுவை சிகிச்சைக்காக பொது மக்களிடம் 56,983/- ரூபாய் நிதி சேகரித்து உதவி வழங்கிய- காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????காத்தான்குடி: மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனனோடை-13 பத்ர் பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் சகோதரர் எம். அமீன் என்பவரின் மூன்றாவது மகள் பாத்திமா நிஷா எனும் 4வயது சிறுமி கடந்த மூன்று வருடங்களாக  இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றார்.

இச்சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் தேவைபடுகின்ற நிலையில் குறித்த சிறுமியின் குடும்ப வறுமையை கருத்தில் கொண்ட காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் அர்களின் ஒன்றிய தொண்டர்கள் மூலம் காத்தான்குடி -5 ஊர் வீதி தொடக்கம் காத்தான்குடி -01 முதலாம் குறிச்சி வரையுள்ள பகுதியில் பொது மக்களிடம் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்து வந்தனர்.

பொது மக்களிடம் சேகரித்த நிதியை சிறுமியின் குடும்பத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இரவு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பிரதான காரியாலயத்தில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

???????????????????????????????

இதன் போது சிறுமியின் இருதய சத்திர சிகிச்சைக்காக பொது மக்களிடம் சேகரிக்கப்பட்ட 56983.00 ரூபாய் இலங்கை வங்கி காசோலை காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபியினால்  சிறுமியின் தந்தை எம்.அமீன், சிறுமியின் தாய் வை.சர்மிளா ஆகியோர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

இந்நிகழ்வில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிதவிக்கும் 4வயது சிறுமியின் சிகிச்சைக்கு 56,983.00 ரூபாய் நிதி உதவி- 

???????????????????????????????

???????????????????????????????

பட விளக்கம்:

இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிதபிக்கும் பாத்திமா நிஷா எனும் 4வயது சிறுமியின் சிகிச்சைக்காக பொது மக்களிடம் சேகரிக்கப்பட்ட 56983.00 ரூபாய் இலங்கை வங்கி காசோலை காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபியினால் சிறுமியின் தந்தை எம்.அமீன், சிறுமியின் தாய் வை.சர்மிளா ஆகியோர்களிடம் கையளிக்கப்படுவதையும், சேகரிப்பதற்கு உதவி வழங்கிய காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் உட்பட ஒன்றிய உறுப்பினர்களையும் மேற்படி படங்களில் காணலாம்.

Published by

One response to “இருதய அறுவை சிகிச்சைக்காக பொது மக்களிடம் 56,983/- ரூபாய் நிதி சேகரித்து உதவி வழங்கிய- காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்”

  1. cheque written in words is wrong please correct otherwise cheque will return

Leave a comment