அல் அக்ஸா வளாகத்திற்கு அருகில் இஸ்ரேல் அகழ்வு பணிகள் ஆரம்பம்

al aqshaஜெரூஸலம்: அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் இஸ்ரேல் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை முதல் அகழ்வுப் பணிகளை ஆரம்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐ. நா. வின் மரபுரிமைகள் தொடர்பான அமைப்பான யுனெஸ்கோவின் உண்மையை அறியும் குழுவின் ஜெரூசலம் விஜயத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்திய தினத்திலேயே இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு ஜெரூசலத்தின் இஸ்லாமிய வக்ப் சபை தலைவர் ஷெய்க் அஸ்ஸாம் அல் காதிப் வழங்கிய தகவலில், அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தின் தென்பகுதி சுவரை ஒட்டிய உமையத் அரண்மனைகள் பகுதி மற்றும் அல் புராக் பிளாசா பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் அல் புராக் பிளாஸா பகுதியில் இஸ்ரேல் நான்கு மாடி வீட்டு கட்டடத்தை அமைக்கவுள்ளது. இதற்கான அனுமதியை ஜெரூசலம் மாவட்ட திட்டமிடல் மற்றும் கட்டுமான குழு 2010 ஆம் ஆண்டில் வழங்கியது. இந்த கட்டடம் 944 சதுர மீற்றர் பரப்பில் அமைக்கப்படவுள்ளது.

அதேபோன்ற உமையத் அரண்மனைகள் பகுதியில் வரலாற்று பாரம்பரிய பகுதிகளை தொடர்புபடுத்தும் வகையில் பாலம் மற்றும் இரும்பு படிகளை அமைக்க இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக அஸ்ஸாம் அல் காதில் குறிப்பிட்டார்.

-தினகரன்

Published by

Leave a comment