அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது எமது நோக்கமல்ல!

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு!

hakeemகண்டி: அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது தமது நோக்கமல்ல என  நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உடுநுவர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு மாற்ற முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஏனெனில், ஸ்திரமான ஒரு அரசாங்கத்துடன் இருந்து எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவதே எமது தேவையாக இருந்தது.

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுடன் உரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் நலனை முன்னிப்படுத்தி முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக மு.கா. உரிய தரப்பினருடன் இணக்கப்பாட்நோடு இணைந்து போட்டியிடுவதற்குத்  முடிவெடுக்கப்பட்டது. மேலும், இணக்கப்பாட்டை எட்டுவதற்கு மு.கா. எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்யத் தயார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு, மு.கா.வின் தலைவரும் நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

இச்சந்திப்பில் மு.கா.வின் செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி., மு.கா.வின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர், பாரூக் முத்தலிப்பாவா எம்.பி., பைஸல் காசிம் எம்.பி. உட்பட கட்சியின் வன்னி மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

-GA

Published by

Leave a comment