துபாய்: இலங்கையில் பயங்கரவாதம் தோற்க்கடிக்கப்பட்டு 04 வருடங்கள் பூர்த்தியடைந்ததை நினவு கூர்ந்தும், நாட்டுக்கும், இலங்கை மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் துபாயில் உள்ள இலங்கையர்களினால் சர்வமத சமய நிகழ்ச்சி ஒன்று கடந்த ஞாயிறு 19.05.2013 அன்று துபாயில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்த்தாநிகத்தில் இடம்பெற்றது.
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத அறிஞர்களினால் நாட்டின் ஒற்றுமைக்காக வேண்டி ஆசிகள் வழங்கப்பட்டன. இலங்கைக்கான கௌன்சுலர் ஜெனரல் M.M. அப்துல் ரஹீம் இந்நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் பெற்ற நிரந்தர அமைதியை சீர் குலைக்க இன்னும் சில உள்நாட்டு, வெளி நாட்டு சக்திகள் செயற்படுகின்றன என்றும், நாட்டில் இனங்களுக்கு இடையேயும் மக்களுக்கு இடையேயும் ஒற்றுமையை வளர்த்து அமைதியை பாதுகாக்க வேண்டியது இலங்கையர்கள் ஒவ்வருவரினதும் கடமை என்றும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்ப்பட்ட துபாய் வாழ் இலங்கையர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment