– OIT
டெல்லி: மும்பை ஹோட்டலில் அழகிகளுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது பொலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகியுள்ள வீரர்கள் மற்றும் தரகர்களிடம் டெல்லி தனிப்பிரிவு பொலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 முறை தரகர்கள் அழகிகளை ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோருக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. அதுபோல், ஸ்ரீசாந்த் அழகிகளுடன் இருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதனைக் காட்டி மிரட்டி அவரை சூதாட்டத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தவும் தரகர்கள் திட்டமிட்டு இருந்தது அம்பலமாகியுள்ளது.
சில காரணங்களுக்காக இந்த ‘பிளக்மெயில்’ திட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக ஸ்ரீசாந்த்தின் நண்பர் ஜிஜு பொலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும், ஸ்ரீசாந்த் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் படம் எடுக்கவில்லை என்றபோதும், வேறு சில வீரர்களின் உல்லாச வீடியோ படங்கள் எடுக்கப்பட்டு இருப்பதாக தரகர்கள் தெரிவித்து உள்ளனர். பொலீஸ் விசாரணையில் ஸ்ரீசாந்த் தினமும் இரவுகளில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்பியதும் தெரிய வந்துள்ளதாம். எனவே, தரகர்கள் கூறியது உண்மையா என்பது குறித்து மேலும் பொலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஸ்பொட் பிக்ஸிங்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் லப்டப்பில் பல்வேறு மொடல் அழகிகளின் நிர்வாண மற்றம் அரை நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை பொலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் ஸ்பொட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லப்டப்பை மும்பையில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் அறை எண் 1213ல் இருந்து முப்பை பொலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த லப்டப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அதிகம் பிரபலமில்லாத மொடல் அழகிகளின் நிர்வாண படங்கள் இருந்ததாகவும், அவர்கள் ஸ்ரீசாந்துடன் 5 முதல் 6 பார்ட்டிகளில் கலந்து கொண்டதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீசாந்த் பல்வேறு பெண்களுடன் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களும் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. டாமரின்ட் டூர்ஸ் அன்ட் டிரவல்ஸ் ஸ்ரீசாந்துக்கும் அவரது தரகர் ஜிஜு ஜனார்தனனுக்கும் சோபிடெல் ஹோட்டலில் 1213 மற்றும் 1214 ஆகிய எண்கள் கொண்ட அறைகளை முன்பதிவு செய்துள்ளது. அந்த அறைகளில் தான் அவர்கள் தங்கியிருந்தனர். அறை எண் 1213ல் தங்கியிருந்த ஸ்ரீசாந்த் ஜுஹுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கடந்த 15ம் தேதி சென்றுள்ளார்.
மேலும் கார் லிங்க் ரோட்டில் உள்ல ஓ.ஆர்.ஜி கிளப்புக்கு சென்ற அவர் அங்கு பல மணிநேரம் இருந்தாராம். ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுக்கான டைரிகளை பொலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ஸ்ரீசாந்த் தனது நடவடிக்கைகளை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார். மொடலிங் உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு தனக்கு கிடைத்த பணவிவரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தார். அதில் அவர் கேரளாவைச் சேர்ந்த 2 தரகர்களின் பெயர்கள் மற்றும் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்பூரைச் சேர்ந்த தரகர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்களை எழுதி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.
சில தரகர்களின் பெயருடன் சேர்த்து சேர், பொஸ், பிஜி என்று அவர் டைரிகளில் எழுதி வைத்துள்ளார். ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து ஒரு லப்டப், ஐபேட், 2 செல்போன் சார்ஜர்கள் மற்றும் ரூ.75,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment