
பழுளுல்லாஹ் பர்ஹான்
பொத்துவில்: பொத்துவில் செங்காமம் மீள் குடியேற்றக் கிராமம் மற்றும் தென் ஆபிரிக்கா சுனாமி வீட்டுத்திட்டக் கிராமம், சர்வோதயக் கிராமம் ஆகிய பிரதேசங்களிளுள்ள மூவின மக்களும் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த அடிப்படை தேவைகளான வீதி, மின்சாரம், விவசாயக் குளங்கங்கள் புனரமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் யானைப் பிரச்சினை, எல்லைப் பிரச்சினைகள் போன்றன தொடர்பான தீர்வினைப் பெற்றுத் தருமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சரினால் திணைக்களத்தலைவர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், பாதுகாப்பு தரப்பினர், ஊர் முக்கியஸ்தர்கள் உடனான சந்திப்பும், உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளும், அபிவிருத்தி ஆரம்பப் பணிகளும் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப் பட்டன.
பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை, அமைச்சரின் செயலாளர் எச்.எம். அன்சார், எதவிச் செயலாளர் எம். ஐ. சலாகுதீன், பிரதச சபையின் தவிசாளர் எஸ். எம். வாஸித், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் இணைப்பச் செயலாளர் ஏ. எல். எம். எம். பதுர்காண் மற்றும் இரானுவ, பொலிஸ் பிரிவின் தலைவர்கள், நீர்ப்பாசனம், வீதி அவிவிருத்தி திணைக்களம், மின்சாரம், சுகதாரம், குடிநீர், வனபரிபாலன திணைக்களம், இலங்கை மின்சார சபை, கல்வி திணைக்களம் ஆகியவற்றின் தலைவர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave a comment