மட்-பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தில் 2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளையும், கற்பித்த அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா

– பழுலுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????காத்தான்குடி: மட்டக்களப்பு- பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் மட்-பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தில் 2012ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.  சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளையும்,கற்பித்த அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா 20-05-2013 இன்று திங்கட்கிழமை மட்-பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் பணிப்பாளரும், வித்தியாலயத்தின் அதிபருமான ஏ.பி.எம்.றஸூல் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு வித்தியாலய அதிபர், பிரதி அதிபர் உட்பட க.பொ.த.  சாதாரணதரப் பரீட்சைக்கு தயார் செய்த  8 எட்டு தமிழ்-முஸ்லிம் ஆசிரிய ஆசிரியைகளும், க.பொ.த.  சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவ மாணவிகளும், இப் பாடசாலையில் கல்வி கற்று முதன் முறையாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான எஸ்.ஏ.சுகைப் என்ற மாணவனும் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் அதிதிகளினால்  விருதும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன்,காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கணித பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.வை.கே.நஸீம், பூநொச்சிமுனை மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எஸ்.எல்.அப்துல் மனாப், பூநொச்சிமுனை மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ஏ.அப்துல் றஸாக், பூநொச்சிமுனை மஸ்ஜிதுல் அஸ்மா பின்த் அபீபக்கர் பள்ளிவாயல் பேஷ் இமாம் .மௌலவி ஏ.ஜே.அப்துல் றஹீம் மற்றும் உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள் ,பெற்றோர்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

மட்-பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தின் அதிபர் றஸூல் ,பாடசாலை ஆசிரியர் ஐ.ஜூனைதீன் ,காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் ஆகியோர் உரையாற்றுவதையும்,இப் பாடசாலையில் கல்வி கற்று முதன் முறையாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான எஸ்.ஏ.சுகைப் என்ற மாணவனுக்கு நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் அதிதிகளினால்  விருதும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்படுவதையும்,பரீட்சைக்கு தயார் செய்த  ஆசிரியைகளில் ஒருவரான ஏஎச்.எப். ஜனாபா பர்ஹானாவுக்கு வித்தியாலய அதிபரின் மனைவி திருமதி றஸூல் விருதும்,பரிசும் வழங்கி கௌரவிப்பதையும் மேற்படி படங்களில் காணலாம்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment