ஐரோப்பாவில் நிறைவடைந்துள்ள சிரேஷ்ட உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் ஒரேபார்வையில்

-MJ

david_beckham.jpg.size.xxlarge.letterbox[1]  * இங்கிலாந்து- மன்செஸ்டர் யுனைட்டட்
  * ஸ்பெயின்- பார்சிலோனா
  * பிரான்ஸ்- பரிஸ் எஸ்.ஜி
  * ஜேர்மனி- பேயர்ன் மியூனிச்
* போர்த்துக்கள்- எப்.சி. போர்டோ
* ரஷ்யா- சி.எஸ்.கே.ஏ. மொஸ்கோ

லண்டன்: வருடாந்தம் உலகளவில் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் உதைப்பந்தாட்டத்தை பிரதானமாக விளையாடும் நாடுகளில் நடாத்தப்பட்டு வந்தாலும், உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களை கவர்ந்திழுக்கும் சுற்றுப் போட்டிகளாக ஐரோப்பா நாடுகளின் உதைப்பந்தாட்ட போட்டிகளைக் குறிப்பிட்டுக் கூறமுடியும்.

அதிலும், இங்கிலாந்து-ஆங்கில பிரிமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா-லிகா பிரிமியர் லீக் ஆகியவை உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களைக் கவர்ந்த சுற்றுப்போட்டிகளாகும்.

Manchester-United-Premier-League-Winners-Parade-1887770[1]

ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து அடுத்த வருடம் மே மாதம் வரை இடம்பெறும் குளிர் கால விளையாட்டுக்களாக இவை ஐரோப்பாவை அசத்திச் செல்லும்.

தற்பொழுது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. இந்தவைகயில்

இங்கிலாந்து- மன்செஸ்டர் யுனைட்டட்

ஸ்பெயின்- பார்சிலோனா

பிரான்ஸ்- பரிஸ் எஸ்.ஜி

ஜேர்மனி- பேயர்ன் மியூனிச்

போர்த்துக்கள்- எப்.சி. போர்டோ

ரஷ்யா- சி.எஸ்.கே.ஏ. மொஸ்கோ

ஆகிய அணிகள் தங்களது நாடுகளில் சம்பியனாக முடிசூடிக்கொண்டுள்ளன.

FC-Barcelona-Champions-league-Winner[1]

இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டட் 20 வது தடவையாக சம்பியன் பட்டத்தை முடிசூடியது மாத்திரமன்றி, இங்கிலாந்து பிரிமியர் லீக் வரலாற்றில் அதிகூடிய வெற்றிகளைப் பெற்றுள்ள கழகமாகவும் வரலாறு படைத்திருக்கின்றது.

26 வருடங்கள் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்துக்கு முகாமையாளராக இருந்த சேர் அலக்ஸ் பெர்கிஸன் கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமாச் செய்து மன்செஸ்டரில் இருந்து வெளியேறி இருந்தார்.

david_beckham.jpg.size.xxlarge.letterbox[1]

மேலும், இங்கிலாந்தின் முன்னாள் சிரேஸ்ட வீரரான டேவிட் பெக்கம், தான் சர்வதேச உதைப்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இறுதியாக பிரான்ஸின் நடப்புச் சம்பியனான பரிஸ் எஸ்.ஜி கழகத்துக்கு பெக்கம் விளையாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment