கொழும்பு: இலங்கையின் உயர் மட்ட வர்த்தக குழுவொன்றினை ரஷ்யாவுக்கு வருகைத்தருமாறு இ்லங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் நிர்வாக துறைக்கான ஆலோஷகர் கொண்ஸ்டன்டின் சொஹசட்வோவ் இலங்கையின் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பின் போது –இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், மற்றும் நேச உறவுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு பாரிய அளவில் இடம் பெறவுள்ள தொழில் நுட்ப கண்காட்சி தொடர்பாக இலங்கையினை அறிவுறுத்தும் வகையிலும், இந்த கலந்துரையாடலின் போது ரஷ்யாவின் ஆலோஷகரினால் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
அதே வேளை ஜூலை மாதம் ரஷ்யாவில் நடை பெறவுள்ள கைத்தொழில் கண்காட்சி (INNOPRM) யில் இலங்கையினையும் கலந்து கொள்ளுமாறு இதன் போது அழைப்புவிடுக்கப்பட்டது.


Leave a comment