யுத்த வெற்றி நிகழ்வில் நீரில் மூழ்கிய கடற்படைப் படகு!

248675763navy3[1]– அபூ இஸ்ஸத்

கொழும்பு: நேற்று கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 4வது யுத்த வெற்றி விழாவின் போது கடற்படையினரின் அணிவகுப்பைத் தொடர்ந்து, கடற்படைப் படகுகளும் கடலில் அணிவகுத்து வந்தன.

இந்நிகழ்வை நேரடியாகப் பார்த்தவர்களுக்கு கடலின் அழுத்தம், கொந்தளிப்பின் காரணமாக கடற்படையினரின் சகல படகுகளும் ஆட்டம் கண்டே பவனி வந்ததை அறிந்திருப்பார்கள்.

இந்நிலையில், இலங்கை கடற்படைக்குச் சொந்தமான மூழ்கியதாகக் கருதப்படும் யுத்தப்படகில் பயணித்த நால்வரும் படகும் ஸ்தலத்தில் முழ்கியதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், ஏனைய மூவர் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

Published by

Leave a comment