
றிஸ்கான் முகம்மட்
கொழும்பு: இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு 4 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு சனிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் யுத்தவெற்றி விழா கொழும்பில் நடைபெற்றது.
யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான நிகழ்வு நேற்று காலையில் கொழும்பு காலி முகத்திடலிலும், தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலையில் பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் டி. எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Leave a comment