காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில் கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் எமது செய்தியாளர் ஒரு மீனவரை வினவிய போது குறித்த பாழ்வத்தோடையில் சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மீதப்பதற்கான காரணம் கடலின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதால்தான் இவ்வாறு இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடற்கரை ஓரங்களில் பெரிய,சிறிய மீன்கள் இறந்த நிலையிலும் உயிரோடும் கரையொதிங்கியமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு இதற்கு முன்னர் குறித்த பாழ்வத்தோடையில் மீன்கள் இறந்த நிலையில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a comment