
பழுளுல்லாஹ் பர்ஹான்
வெலிகம: தென்மாகாணத்தில் வெலிகம ஜாமியுல் இஹ்ஸான் ஜும்மாப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24ம் திகதி அறிவுக்கு உரமூட்டும் உணர்வுக்கு உயிரூட்டும் மாபெரும் இஸ்லாமிய அழைப்பு மாநாடொன்று வெலிகம ஜாமியுல் இஹ்ஸான் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளதாக வெலிகம ஜாமியுல் இஹ்ஸான் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி பணிப்பாளருமான எம்.ஓ. பத்ஹுர்ரஹ்மான் (பஹ்ஜி) தெரிவித்தார்.
குறித்த இம்மாபெரும் மாநாட்டில் ‘கொள்கையில் பற்றும் உணர்வில் உயிரோட்டமும் உண்மை முஃமினின் உயர் இலட்சணங்கள்’எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் டாக்கடர் ரயிஸுத்தீன் (ஷரஈ), ‘உண்னைத் திருத்து உலகம் திருந்தும்’எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் அப்துல் நாஸர் (ஸலாமி), ‘சவால்களால் உறுதி பெரும் உலகளாவிய உம்மத்’ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் முஜாஹித் இப்னு ரஸீன்(ஸஃதி) ஆகிய உலமாக்களினால் சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் குத்பா ‘நேர்வழியில் நிலைத்தோரின் நிறைவான குணங்குறிகள்’ எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக் மதனி நிகழ்த்தவுள்ளதுடன் இம்மாநாட்டில் பெண்களுக்கான சகல ஏற்பாடுகளும் பிரத்தியேகமாக செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 09.30மணிக்கு நிறைவு பெறவுள்ளது.
குறித்த ஜாமியுல் இஹ்ஸான் பள்ளிவாயல் ஜம்மியதுல் இஹ்ஸான் நலண்புரிச் சங்கத்துடன் இணைந்து தென்மாகாணத்தில் குறிப்பாக வெலிகம பிரதேசத்தில் பல்வேறு ஆண்மீக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment