
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதியொருவருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என். எம். அப்துல்லாஹ் 20ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த 14ம் திகதி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரை காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து அத்தியட்சகர் எஸ். ஐ. ஜயவர்த்தன தலைமையிலான உதவிப் பொலிஸ் பரிசோதகர் உ. போபா,பொலிஸ் சார்ஜன்களான பாயிஸ், முஹம்மதுல்லாஹ், சரத், நிமால், வசந்த உள்ளிட்ட குழுவினர் அவரைப் பிடித்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்திய போதே நீதிபதி குறித்த தொகையை அபராதமாக விதித்துள்ளார்.
இவ்வாறான குற்றங்களுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment