ஸ்பொட் பிக்ஸிங்: புக்கிகளுக்கும் வீரர்களுக்குமிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள்

fix-OIT

டெல்லி: புக்கிகளுக்கும், ஐபிஎல் வீரர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு அதில் சில பகுதிகளை மட்டும் டெல்லி பொலீஸார் வெளியிட்டுள்ளனர். இதில் ஸ்ரீசாந்த் பேசிய பேச்சு எதுவும் இடம் பெறவில்லை. மற்ற இரு வீரர்களின் பேச்சுக்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.

டெல்லி பொலீஸார் நேற்று இந்த தொலைபேசி பேச்சுப் பதிவுகளை வெளியிட்டனர். இந்த உரையாடலில் ஸ்ரீசாந்த்தின் நண்பர் ஒருவரின் பேச்சும் இடம் பெற்றுள்ளது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டிகள் தொடர்பான உரையாடல் இவை.

3 வீரர்கள் 11 புக்கிகள்:

ஐ.பி.எல் ஸ்பொட் பிக்ஸிங்கில் மொத்தம் 3 வீரர்களும், 11 புக்கிகளும் தொடர்பு கொண்டிருப்பதாக டெல்லி பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் உரையாடல்:

முதல் உரையாடல் புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது நடந்துள்ளது.  அஜீத் சண்டிலா மற்றும் புக்கி அமீத் ஆகியோர் பேசியுள்ளனர்.

சண்டிலா: “சொல்லு பிரதர். நான் சிக்னல் தருகிறேன். முதல் ஓவர் போகட்டும். பிறகு பார்க்கலாகம்”.

அமீத்: “முதல் ஓவரை நம்பிக்கையுடன் வீசவும். அதே நம்பிக்கையுடன் 2வது ஓவரையும் எங்களுக்காக வீசவும்”.

சண்டிலா:  “ஓகே. ஓகே. நான் செய்கிறேன்”.

அமீத்:  “சரி உங்களது சிக்னல் என்ன..?”

சண்டிலா: “எனது டீ சேர்ட்டை 2 முறை மேலும் கீழும் இழுத்து விடுவேன். பிறகு நின்று பார்ப்பேன். அதன் பிறகு பந்து வீச்சை தொடங்குவேன்”.

ஆனால் சொன்னபடி டீ சேர்ட்டை இழுத்து விடவில்லை சண்டிலா. இருப்பினும் தான் புக்கிகளுக்கு ஏற்கனவே வாக்களித்தபடி அந்த ஓவரில் 14 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார்.

அந்த ஓவரை பிக்ஸ் செய்வதற்காக சண்டிலாவுக்கு ரூ. 40 லட்சம் பேசப்பட்டது. இருப்பினும் அவர் சிக்னலை செய்யாத காரணத்தால் வாங்கிய ரூ. 20 லட்சம் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க நேரிட்டதாம். மீதமுள்ள ரூ.20 லட்சம் பணமும் அவருக்குக் கிடைக்கவில்லை.

fix

ஸ்ரீசாந்த்தின் நண்பர் ஜிஜு 2வது உரையாடலில் ஸ்ரீசாந்த்தின் நண்பர் ஜிஜு ஜனார்த்தனும், புக்கி சந்த்தும் பேசியுள்ளனர். இது ராஜஸ்தான் ரோயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டிக்கு முன்னதாக நடந்துள்ளது. அதில்2வது ஓவரில் ஸ்ரீசாந்த் 14 ரன்களை விட்டுத்தர வேண்டும் என்பது குறித்த பிக்ஸிங் பேச்சு.

சந்த்: என்ன சிக்னல் தருவார்?”

ஜிஜு: “நான் சொல்லி விட்டேன். வழக்கத்திற்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டார். 2வது ஓவரை வீசப் போவதற்கு முன்பு Tடவலை எடுத்து சொருகுவார்.

சந்த்: “பிரதர், ஓவர் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே இந்த சிக்னலை கொடுக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் எங்களால் புக்கிங்கைத் தொடங்க சரியாக இருக்கும்”.

3வது உரையாடல்:

3வது உரையாடல் சண்டிலாவுக்கும், அங்கீத் சவானுக்கும் இடையே நடந்துள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டிக்கு முதல் நாள் நடந்த பேச்சு. இப்போட்டியில் சண்டிலா விளையாடவில்லை. இருப்பினும், தனது 2வது ஓவரில் 13 ரன்களை விட்டுக் கொடுக்குமாறு அவர் சவானை ஆதரித்தும், ஊக்குவித்தும் பேசியுள்ளார்.

சவான்: “நான் வெளியில் இருக்கிறேன்”.

சண்டிலா: :ஓ.கே. நான் சரி என்று சொல்லட்டா.

சவான்: “சரி, ஆனால் எவ்வளவு?”

சண்டிலா: “12 சொல்கிறார்கள்”.

சவான்: “இல்லை, அது முடியாது என்று நினைக்கிறேன். ரொம்ப அதிகம்”.

சண்டிலா: “நான் உறுதியளித்து விட்டேன். செய்தாக வேண்டும். சரி என்று சொல்லி விடட்டா?”

சவான்:  “சரி, சொல்லி விடு”.

சண்டிலா: “ஒரு ஓவருக்கு ரூ. 60 லட்சம் என்று அவர்களிடம் சொல்லியுள்ளேன்”.

சவான்:  “சரி, ஓ.கே. நான் எனது ரிஸ்ட் பேண்ட்டை இழுத்து விடுவேன். அதுதான் சிக்னல்”.

இத்தகைய உரையாடல்களை டில்லி பொலிஸார் தற்பொழுது வெளியிட்டிருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட சுமார் 15 பேர்களை பொலிஸார் கைது செய்திருப்பதுடன், மேலதிக விபரங்களைத் திரட்டி வருகின்றனர். உண்மை உறுதிப்படுத்தப்படும்வரை குறித்த வீரர்கள் விடயத்தில் மோசமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டிருக்கின்றனர்.

Published by

Leave a comment