– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: மோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்பது இலங்கை பொலிஸாரின் சட்டமாகும் எனினும் கிழக்கு மாகாணத்தில் அதிகம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ என மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் தெரிவித்தாக முக்கிய தமிழ் இணையத்தளங்கலிலும், பத்திரிகையிலும், ஊர் இணையத்தளங்கலிலும் செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்த விடயமே.
எனினும் 17-05-2013 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் ஜூம்மா தொழுகைக்காக சென்ற முஸ்லிம் பொது மக்களை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் பிடித்து அவர்களின் சாரதி அனுமதி பத்திரங்ளை பறிமுதல் செய்ததுடன் அவர்களில் சிலருக்கு தண்டப்பணமும், நீதி மன்றம் செல்வதற்கு (தட கொலைகளையும்) அபராத சீட்டுக்களையும் வழங்கியுள்ளனர்.
அத்தோடு பொலிசாரிடம் கருத்து தெரிவித்த பொது மக்கள் பொலிசாரிடம் தங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ என்று தெரிவித்ததாகவும் கூறினர். அதற்கு கருத்து தெரிவித்த பொலிசார் அப்படியானால் நீங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனை தொடர்பு கொண்டு அவரிடம் சொல்லுங்கள் அவர் சொன்னால் நான் விட்டு விடுகின்றேன் என்று தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ தான் சொல்வில்லை என்றும் மோட்டார் சைக்களில் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவித்ததோடு மட்டுமன்றி அதனை மீறுவோருக்கு பொலிசார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும் இன்று வெள்ளிக்கிழமை தலைக்கவசம் அணியாமல் பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக சென்ற பொது மக்களை பொலிசார் பிடித்த காரணத்தால் சிலரின் ஜூம்மா தொழுகைகளும் பாழாகியுள்ளது.
ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியும் விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இதற்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் பொலிஸ் திணைக்களம் முஸ்லிம் மக்களுக்ளு தெளிவை வழங்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Leave a comment