‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’எனும் தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்டம்: ஒளிப்பதிவு மிக விரைவில்

1-DSC– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் அன்மையில் ஏற்பட்ட தடைகள் அரசியல் சூழ்நிலைகள் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ‘சமகாலத்தில் – மக்களுடன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்’ எனும் தொனிப்பொருளிலான பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 08.40 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தலைமையுரையை காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் நிகழ்த்தியதுடன் அதற்கடுத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உரையாற்றினார்.

???????????????????????????????

இறுதியாக  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 1 மணித்தியாளமும் 50 நிமிடமும் சிறப்புரையாற்றினார்.

???????????????????????????????

இம்மாபெரும் பொதுக் கூட்டத்தில் கிழக்கு மண் பத்திரிகை பிரதம ஆசிரியரும் ஊடகவியலாளருமன ரீ.எல். ஜவ்பர்கான் மற்றும் பெருமளவிலான சகோதரர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு பிராந்திய ரீதியாக வானொலியில் கஅ 96.7 அhண அலைவரிசையிலும் சர்வதேச ரீதயாக www.hizbullah.org.lk   எனும் இணையத்தளத்திலும் நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

Published by

Leave a comment