காத்தான்குடியில் அச்சம் சூழ்ந்த காலநிலை: மின்சாரம் துண்டிப்பு!

images[5]– விசேட நிருபர்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டில் பல பாகங்களில் தற்பொழுது பலத்த சுழற்காற்று வீசிக்கொண்டிருக்கின்றது.

நேற்று மாலை தொடக்கம்  மின்னலுடன் இலேசான காற்றுடன் ஆரம்பமான இக்கால நிலை பின்னர் பலத்த காற்றுடன் மோசமடைந்து வருகின்றது.

கரையோரங்களிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுகொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

நேற்று மாலையிலிருந்து இடைக்கிடையே துண்டிக்கப்பட்ட மின்சாரம், தற்பொழுது முழுமையாக துண்டிக்கப்பட்டிருக்கின்றது.

மாரிகாலங்களில் மட்டுமே ஏற்படும் இத்தகைய அபாயகரமான காலநிலை மாற்றத்தை மக்கள் ஏதோ ஓர் அச்சத்துடன் எதிர்நோக்கி வருவதையும் காணமுடிகிறது.

மேலதிக விபரங்கள் தொடர்ந்து பதிவேற்றப்படும்

Published by

Leave a comment