இலங்கைக்கும் உலகுக்கும் ஓர் முன்மாதிரியான ஊராகத்திகழ்ந்த காத்தான்குடி, அரசியல் கலாச்சாரத்தில் அடிமையாகிக் கொண்டதால் தொடர்ந்து பல தரப்பட்ட அவமானங்களை அண்மைக்காலமாக சந்தித்து வருவது கவலை தருகின்றது.
பலஸ்தீனத்தில் முஸ்லிம்களின் பூமியை யூதர்கள் பறித்தெடுப்பதன் காரணமாக அங்கு அன்று முதல் இன்றுவரை கலவரம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதே போல் காத்தான்குடியில் நகரசபையால் பள்ளிக்காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாலும் இத்தகைய பூமிக்கான கலவரங்கள் காத்தான்குடியில் நிகழ்ந்து வருவது வெட்கத்திற்குரியவை!
தனது சொந்தப் பூமியில் ஒரு அங்குலத்தையாவது விட்டுக்கொடுக்க முடியாதவர்கள், அல்லாஹ்வின் இறை இல்லங்களின் சொத்துக்களை கபடத்தனமாக, பலவந்தமாக அபகரிப்பது, ஓர் அறிவுள்ள நாகரிகத்துக்கு அப்பாற்பட்டதே!
ஓர் பாமரனுக்கும்கூட அல்லாஹ்வின் சொத்துக்களில் அச்சம் இருப்பதே நியாயமானது.
உலமாக்கள், சம்மேளனம், சமரச சபை என்று எத்தனையோ பொது அமைப்புக்கள் இருக்கையில், அனைவரையும் புறக்கணித்துவிட்டு, பலவந்தமாக இவ்வாறான பள்ளிக்காணிகளை அபகரிப்பதில் எந்த திருப்தியை இவர்கள் அடைந்துகொள்கின்றனர் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் மெத்தைப்பள்ளிக் கடைகள் அபகரிக்கப்பட்டன. இன்று ஜாமியுழ்ழாபிரீன் காணி அபகரிக்கப்பட்டிருக்கின்றது. நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் ஊரில், அல்லாஹ்வின் இல்லத்தைவிட அரசியல் மேலோங்கி இருப்பது வெட்கித்தலைகுணிய வேண்டிய விடயமாக இருக்கின்றது.
எனவே, உலமாக்கள், சம்மேளனம் மற்றும் சமரச சபை, பொதுமக்கள் அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயல் காணிகளை அபகரிக்கும் விடயங்களில் நீதமாக நடந்து இஸ்லாத்தை ஊரில் மீண்டும் நிலைநாட்ட முயற்சிக்குமாறும் காத்தான்குடி மக்கள் சார்பாக மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி
ஏ. ஹயாத்து முகம்மது
(அரசியல் சார்பற்றவன்)
காத்தான்குடி

Leave a comment