அம்பாறை: அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உணவு,போசாக்கு ஊக்குவிப்பு அமைச்சர் பி. தயரட்ண கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி,அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷிராணி, அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன புதிய தலைவராக சர்ஜுன் உதுமாலெப்பையும் உப தலைவராக ஏ.ஜி.எம்.அன்வரும் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் புதிதாக இளைஞர் பாராளுமன்றத்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்பாறை மாவட்ட உறுப்பினர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment