காத்தான்குடியில் பதற்றம் / மையவாடி காணி தகராறு இதற்குக் காரணம்

விசேட நிருபர்

jm காத்தான்குடி: காத்தான்குடி 06 ஜாமியுல்ழாபிரீன் மையவாடியின் ஒரு பகுதியை குறிப்பாக (காத்தான்குடி நுாரி புத்தக நிலையம், மற்றும் ஸ்டார் கடைக்கு முன்பாக உள்ள) மைய வாடிப் பகுதியனை ஏற்கனவே திட்டமிட்ட படி காத்தான்குடி  நகரசபை நகர முதல்வா் அஸ்பரின் தலைமையில்  வேலி இட்டு அடைக்க முற்பட்டதை அடுத்து  அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர முதல்வர் மையவாடி காணியை   வேலியிட்டு அடைக்க முற்படுகின்றார் என்ற செய்தியினைக் கேள்வியுற்ற காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் தலைவா் இஸ்மாயில் ஹாஜியாரும் உடன் சம்பவ இடத்துக்கு வந்து தவிசாளருடன் பேசியதாகவும் தகவல்.

இதன் யதார்த்த நிலை என்ன என்று அறிவதற்கு கால அவகாசம் கிடைக்கவில்லை….

இதற்கிடையில் ஜமாஅத்தார்கள் என்ற பேரினில் அங்கு வந்த பல இளைஞா்கள் வன்முறையில் ஈடு பட்டதாகவும் பலா் சுட்டிக் காட்டுகின்றனர்.

நிலைமையினை அவதானித்த தவிசாளர் அவ்விடத்தினை விட்டுச் சென்றதாகவம் அதற்கிடையில் பாதுகாப்பு தரப்பினர் அங்கு வந்து நிலைமையினை கட்டுப்படுத்த முட்பட்ட போது இளைஞா்கள் பலா் பாது கப்பு தரப்பினருக்கு  கல்லடித்ததாகவும் அதனால் ஆத்திமுற்ற பாதுகாப்பு தரப்பினா் வீதியால் வந்த பொதுமக்களை தாக்கியதாகவும் பலா்  படுகாயம் அடைந்ததுடன் தாக்குதலுக்கு இலக்கானவா்களில் காத்தான்குடி நுான் அச்சகத்தின் உரிமையாளர் ஒருவர் என்றும் ஒரு தகவல் .

Published by

Leave a comment