புத்திசுவாதீனமுற்ற மகன் தாக்கியதில் தாய் பலி-காத்தான்குடியில் சம்பவம்

janasa– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி:  காத்தான்குடி  3ஆம் குறிச்சி ஊர்வீதி மில்லத் மகளிர் வித்தியாலய வீதியில் புத்தி சுவாதீனமுற்ற மகன் ஒருவர் தாயை அடித்துத்; தாக்கியதில் தாய் பலியான சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஊர் வீதி மில்லத் மகளிர் மஹா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த புத்திசுவாதீனமுற்ற மகன் தனது தாயை வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியும் அடித்தும்  உள்ளதால் படுகாயமடைந்த தாயை வீட்டிற்கு அருகிலுள்ள அயலவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே றஹ்மத்தும்மா (வயது 54) எனும் தாய் வழியில் உயிரிழந்துள்ளார்.

தாயை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் குறித்த அவரது மகன் தற்போது பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாயின் சடலம் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த அவரது மகன் மிக நீண்டகாலமாகமாக புத்தி சுவாதீனமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment