சில பிரதேச சபைகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்திவருகின்றனர்: சுசன்த புன்சி நிலமே

–  வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

susanthaPunchinilame[1]வவுனியா: வவுனியா மாவட்டத்தில் வாழும் அனைத்து சமூகத்திற்கு சமமான அபிவிருத்தி பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், சில பிரதேச சபைகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசன்த புன்சி நிலமே வன்னி மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை அமைச்சர் றிசாத் பதியுதீன் பெற்றுக் கொடுத்துவருவது எம்மால் பாராட்டப்பட வேண்டியது என்றும் கூறினார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.வன்னி மாவட் அபிவிருத்தி குழுவனி தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற போது பிரதி அமைச்சர மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் அங்கு பேசும் போது கூறியதாவது-

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்காகவே உள்ளது. அபிவிருத்தி திட்டங்களை காட்டி மக்களது வாக்குகளை பெறுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. ஆனால் வவுனியா தமிழ் பிரதேச சபையில் மட்டும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது. அரசாங்கம் நிதியினை வழங்கினாலும், பிரதேச சபை அதனை நடை முறைப்படுத்துவதில்லை என்ற குற்றச் சாட்டு மக்களிடத்தில் இருந்து எனக்கு வந்துள்ளது. அதிகாரிகள் கூட தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர். இந்த நிலை தொடருமெனில் பிரதேச மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இல்லாமல் போய்விடும்.

நான் பிரதி நிதித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்டத்தில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருக்கின்றார். அவர் கூட அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு வந்து மக்களது தேவைகளை முன் வைப்பார்.அவரால் முன் வைக்கப்ட்ட பல கோறிக்கைகளை நாம் நிறைவு செய்து கொடுத்துள்ளோம். அவரது நிதியினை மதத் தளங்களின் புனரமைப்புகளுக்கு வழங்குவதற்கான அனுமதியினை நான் வழங்கியுள்ளேன்.

ஆனால் வவுனியாவில் மட்டும் ஒரு பிரதேச சபை வேறு விடயமாக செயற்படுகின்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரு பிரிவு இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை உயர் மட்ட அதிகாரிகள் மட்டும் அறிந்திருப்பது மட்டும் போதாது. அது கிராம அடிமட்ட மக்களையும் சென்றடைய வேண்டும என்பது தான் எமது எதிர்பார்ப்பு.அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் முன் வைக்கப்படும் அனைத்து திட்டங்களுக்கு எமது அமைச்சு அனுமதியளித்தவருகின்றது.அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் தான் அந்த திட்டங்கள் நடை முறைக்கு வரும்.எனவே சகல திட்டங்களும், பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதியுடன் எமது அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். என்றும் பிரதி அமைச்சர் சுசன்த புன்ஞி நிலமே கூறினார்.

வடமாகாண பிரதம செயலாளர். திருமதி விஜயலட்சுமி, வவுனியா அரசாங்க அதிபர். கோ்பந்துல ஹரிச்சந்திர, வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹதீன், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் முத்து முஹம்மத், உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment