டீன் பைரூஸ்.
காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் தற்போதைய தலைவர் அல்.ஹாஜ். கே.எல்.எம். றஹீம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் அவா்களின் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவா், ஒரு சிறந்த சமூக சேவையாளா் மாத்திரமின்றி பல் வேறுபட்ட சமூக, சமய பணிகளில் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றார். இவா் புதிய காத்தான்குடி மட்-பாத்திமா பாலிஹா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும், மட்-அல் அமீன் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினரும், ஹிஸ்புல்லா பாலர் பாடசாலையின் நிர்வாக சபை உறுப்பினரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment