சண்டிகர்: ஜம்மு சிறையில் சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆயுள் தண்டனைக் கைதி சனாவுல்லா ரஞ்சய் கோமாநிலையிலிருந்து மீளாமலேயே இன்று காலை மரணமடைந்தார்.
54 வயதான சனாவுல்லா கடந்த 1999ம் ஆண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார். ஜம்முவில் உள்ள பிரபலமான கோட் பல்வால் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
பாகிஸ்தான் சிறையில் இந்தியக் கைதி சரப்ஜித் சிங் கைதிகளால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சனாவுல்லாவை சக கைதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்தார் சனாவுல்லா. அவரை ஜம்மு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சண்டிகருக்குக் கொண்டு வந்து அங்கு சேர்த்தனர். அங்கு கோமா நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். மே 7ம் தேதி சனாவுல்லாவின் குடும்பத்தினர் அவரை வந்து பார்த்தனர். இந்த நிலையில் இன்று சனாவுல்லா மரணமடைந்தார்.
![SANAULLAH[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/sanaullah1.jpg?w=78&h=90)
![sanaullah_350_050513111011[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/sanaullah_350_0505131110111.jpg?w=350&h=210)

Leave a comment